கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
கென்யாவில் டயானியில் இருந்து கிச்வா டெப்போவுக்கு 5Y-CCA என்ற என்ற சிறிய ரக விமானம் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த விமானம் கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 12 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர். கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த சம்பவத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
இந்த விபத்து குறித்து டைரக்டர் ஜெனரல் எமிலி அராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டயானியில் இருந்து கிச்வா டெம்போ செல்லும் வழியில் 5Y-CCA என்ற விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். குவாலே மாவட்ட ஆணையர் ஸ்டீவன் ஓரின்டே, கவுண்டி விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


