ஏவுகணைகளை வழங்க வேண்டும்- அமெரிக்காவிற்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்கவில்லை. இதனால் ரஷ்யாவின் இரு பெரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் தடை விதித்தார். ரஷ்யாவின் மிகப்பெரும் வருவாய் ஆதாரமாக திகழும் இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,, ரஷ்யாவுடன் போரை நடத்தி வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவை பெறுவதற்காக இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்த லண்டன் சென்றுள்ளார். அங்கு வெளியுறவுத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது மட்டுமல்ல அனைத்து ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ரஷ்ய ஏரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். நாங்கள் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களை குறி வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தி வருகிறோம். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *