பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்தது…. 21 பேர் உடல் கருகி பலி

ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 21 பயணிகள் உடல் கருகி பலியானார்கள்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் கிராமத்தில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த பாது பைக் மீது மோயதிது. இதில் பேருந்து அடியில் பைக் சிக்கியது. இதனால் பைக்கில் ஏற்பட்ட தீப்பொறி பேருந்தில் பற்றிக் கொண்டது. இதனால் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

இதில் பைக் ஓட்டிவந்தவர் உள்பட பேருந்தில் இருந்தவர்கள் உள்பட 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதிகாலை விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்து உறங்கிக் கொண்டிருந்ததால் பயணிகள் அதிக அளவு உயிரிழந்தனர் என்பது தெரிய வந்தது இந்த பேருந்தில் 40 பேர் பயணிகள் பயணம் செய்தனர். இரண்டு குழந்தைகள் உள்பட இரண்டு ஓட்டுநர்கள் உள்பட 19 பேர் விபத்தில் இருந்து உயிர் தப்பியதாக கர்னூல் ரேஞ்ச் டிஐஜி கோயா பிரவீன் தெரிவித்தார்.

இந்த நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா 2 லட்ச ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *