விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்ததில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
வெனிசுலாவில் உள்ள டாச்சிரா மாகாணம் பாரமில்லோ விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-31டிஐ என்ற விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேலே பறந்து கொண்டிருந்த விமானம் சில வினாடிகளிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் தலைகீழாக கீழே விழுந்தது. இதனால் விமானம் வெடித்து தீப்பிழப்பு கிளம்பியது.
இதைக் கண்ட தேசிய சிவில் ஏரோநாட்டிங்க நிறுவனம்(ஐஎன்ஏசி) அவசரநிலை மற்றும் தீயணைப்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நின்றதாகவும், பின்னர் ஓடுபாதையில் மீண்டும் மோதி தீப்பிடித்து எரிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க ஜுண்டா இன்வெஸ்டிகடோரா டி ஆக்ஸிடென்ட்ஸ் டி ஏவியாசியன் சிவில்றுவனத்தை இந்த நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விமானம் புறப்பட்ட போது டயர் வெடித்திருக்கலாம் என்று தெரிய வந்தது. ஆயினும் விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகு எதனால் விமானம் தரையில் மோதியது என்று தெரிய வரும்.
இந்த விபத்தில் விமானி ஜோஸ் அன்டோனியோ போர்டோன் டெரிஃப்( 50), துணை விமானி ஜுவான் மால்டோனாடோ( 47) ஆகியோர் உயிரிழந்தனர் என்பது தெரிய வந்ததுள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


