சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கே. பொன்னுசாமி (70) இருந்தார். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கே.பொன்னுச்சாமி வெற்றி பெற்றார் கடந்த 2011, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு கே.பொன்னுசாமி மீண்டும் வெற்றி பெற்றார். அவரது மறைவிற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


