தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.789.85 கோடி மது விற்பனை: அன்புமணி வருத்தம்!

தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு தமிழ்நாட்டு மக்களை திராவிட மாடல் அரசு சீரழித்து வைத்திருக்கிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டு தான் இதுவாகும்.

தீபாவளித் திருநாளுக்கு இரு நாள்கள் முன்பாக கடந்த 18-ம் தேதி ரூ.230.06 கோடி, அதற்கு அடுத்த நாள் 19-ம் தேதி ரூ.293.73 கோடி, தீபாவளி நாளில் ரூ.266.06 கோடி என மொத்தம் 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இதில் சென்னை மண்டலம் ரூ.158.25 கோடி, திருச்சி மண்டலம் ரூ. 157.31 கோடி, சேலம் மண்டலம் ரூ.153.34 கோடி, மதுரை மண்டலம் ரூ.170.64 கோடி, கோவை மண்டலம் ரூ.150.31 கோடி என்ற அளவில் பங்களித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டம் என்று போற்றப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.13,000 கோடி, அதாவது ஒரு நாளைக்கு ரூ. 35.61 கோடி. 3 நாள்களுக்கு கணக்கிட்டால் ரூ.106.86 கோடி. ஏழைக் குடும்பங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கும் தொகையை விட, 7.39 மடங்கு அதிக தொகையை மது வணிகம் என்ற பெயரில் ஏழைக் குடும்பங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது. இவ்வாறு மதுவைக் கொடுத்து மக்களிடமிருந்து பணத்தைப் பறித்தால் ஏழைக் குடும்பங்கள் எங்கிருந்து முன்னேறும்?

ஒன்று மட்டும் உறுதி, தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை. அதனால் தான் மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் அறத்தை திராவிட மாடல் அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் நிலையில், அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *