உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டில் இன்வெர்னஸ் நகரில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் பெக்கி கேம்பல் என்ற 96 வயது மூதாட்டி தங்கியிருந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அப்போது முதியோர் இல்லத்தில் கவனத்துக் கொள்ளும் ஊழியர்கள் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில மணி நேரத்திலேயே மூதாட்டி பெக்கி கேம்பல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் ஆறு ஆண்டுகளில் இது ஐந்தாவது தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


