திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா- 2025 : மாவட்ட ஆட்சியர் விதித்த கட்டுபாடுகள்..!

கந்த சஷ்டி திருவிழா- 2025 :-

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 2025, இந்தாண்டு 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அன்னதானம் வழங்க கட்டுபாடு:-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளார். இதை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லடரசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இப்படி வருகைபுரியும் பக்தர்களுக்கு தனியார் அமைப்புகளும்; தன்னார்வலர்களும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகள் என அன்னதானம் வழங்குவது வழக்கமான ஒன்று.

பதிவு செய்ய வேண்டும்:-

அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர் தூத்துக்குடி இணை இயக்குநர், வேளாண்மைத்துறை கட்டிடம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளத்தில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்றிதல் பெற வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:-

அதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

அன்னதானம் வழங்குவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும. அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும்.

தொடர்பு எண்கள் :-

மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு 0461-2900669 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் 9444042322 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Related Posts

    திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

    திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

    தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *