பிஹார் தேர்தலில் பரபரப்பு… காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜேஎம்எம் விலகல்!

பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மேலும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர அசாதுதீன் ஓவைசி இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிஹார் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள், தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன. அத்துடன் வேட்பாளர்கள் பட்டிலையும் அறிவித்து வருகின்றன. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. கடந்த 17-ம் தேதி காங்கிரஸ் கட்சி தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சுதீப் குமார் சோனு தெரிவிக்கையில், “ஆழ்ந்த வருத்தத்துடன், இந்த முறை பிஹார் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று ஜேஎம்எம் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான கூட்டாளி போட்டியிடுவதைத் தடுத்திருந்தால், அதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த நிலைமைக்கு ஆர்ஜேடி தலைமையே முழுப் பொறுப்பேற்க வேண்டும். தொகுதி பங்கீடு விவாதங்களில் ஜேஎம்எம் சேர்க்கப்படுவதை உறுதி செய்யத் தவறியதற்கு காங்கிரஸும் பொறுப்பேற்கிறது.

பிஹாரில் தீவிர பிரச்சாரத்தில் ஜேஎம்எம் பங்கேற்காது. அங்கு அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடாது. இந்த துரோகம் ஜார்க்கண்டில் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். ஜார்க்கண்டின் உணர்வு அவமானத்தை மறக்காது. ஜேஎம்எம் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் வலுவான குரல் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துவோம் ” என்று கூறினார். மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகியுள்ளது பிஹார் தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *