தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரம் – கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட்டை திறந்து விட்ட ஊழியர்கள்!

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 5 ஆயிரம் வாகனங்களுக்கு பணம் வாங்காமல் டோல்கேட்டை திறந்து விட்டதால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே வழங்கப்படும் மிகை ஊதியமான போனஸை அனைத்து ஊழியர்களும் எதிர்பார்ப்பார்கள். இந்தியா முழுவதும் நேற்று (அக்டோபர் 20) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால், தங்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் செய்த செயலால், நிறுவனத்திற்கு 30 லட்ச  ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா- லக்னோ விரைவுச்சாலையில் உள்ள டோல்கேட்டில் தான் நடந்துள்ளது.

ஸ்ரீ சாய் அண்ட் தாதர் நிறுவனத்தின் கீழ் டோல்கேட்டில் 21 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவு போனஸ் வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு 5,000 ரூபாய் பெற்ற போனஸ் இந்த ஆண்டு 1,100 ரூபாயாக மாற்றப்பட்டதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். மேலாளரை சந்தித்து வலியுறுத்தியும் போனஸ் பிரச்னை தீரவில்லை. இதனால் தீபாவளிக்கு முதல் நாள் (அக்டோபர் 19) அன்று டோல்கேட்டை திறந்து விட்டனர். இந்த டோல்கேட் வழியாக கட்டணம் செலுத்தாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றன. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி திறக்கப்பட்ட இந்த டோல்கேட் வழியாக நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் அதிவேகத்தில் கடந்து சென்றுள்ளன.

இந்த தகவல் அறிந்த டோல்கேட் நிறுவன திட்ட மேலாளர் கிருஷ்ணா ஜுரைல், ஊழியர்களை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர், ஆனால், அவர்களால் ஊழியர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊழியர்கள் மற்ற ஊழியர்களையும் வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மூத்த அதிகாரிகள் தலையிட்டு, டோல்கேட் ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பள உயர்வு தருவதாக உறுதியயளித்தனர். இதனை டோல்கேட் ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

டோல்கேட்டில் பொருத்தப்பட்ட கேமராக்களின்படி இரண்டு மணி நேரத்திற்குள் லக்னோவிலிருந்து ஆக்ரா நோக்கி வரும் சுமார் 5,000 வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றன. இந்த காலகட்டத்தில் வாகனங்களின் வேகம் மிக வேகமாக இருந்ததால் ஃபாஸ்டாக் ஸ்கேனிங்கும் பல இடங்களில் வேலை செய்யவில்லை. இந்த விரைவுச் சாலையில் ஒரு காருக்கு டோல்கேட் கட்டணம் 665 ரூபாயாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நிறுவனத்திற்கு நேரடியாக 30 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நிறுவனம் உயர்மட்ட விசாரணையை நடத்தி வருகிறது,

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *