ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டமானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் தண்டுரை விவசாயி தெருவில் ஒரு வீட்டில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி வெடித்ததில் வீடு முழுவதும் தரைமட்டமானது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாட்டு வெடி விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். இதில் சுனில், பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தத தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


