தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), திருச்சி-தாம்பரம் ( வண்டி எண்06190), போத்தனூர்-சென்டிரல் (வண்டி எண் 06050), தாம்பரம்-கன்னியாகுமரி ( வண்டி எண் 06133), மதுரை-தாம்பரம் ( வண்டி எண் 06162), எழும்பூர்-மதுரை ( வண்டி எண் 06045), கோவை-திண்டுக்கல் ( வண்டி எண் 06139), திண்டுக்கல்-கோவை ( வண்டி எண் 06140), சென்ட்ரல்-போத்தனூர் ( வண்டி எண் 06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 24 ரயில்கள் இன்று (அக்டோபர் 18 ) இயக்கப்பட உள்ளன.
திருச்சி-தாம்பரம் ( வண்டி எண் 06190), தாம்பரம்-திருச்சி ( வண்டி எண் 06191), நெல்லை-மேட்டுப்பாளையம் ( வண்டி எண் 06030), நாகர்கோவில்-தாம்பரம் ( வண்டி எண் 06012), போத்தனூர்-சென்ட்ரல் ( வண்டி எண் 06044), நெல்லை-செங்கல்பட்டு (வண்டி எண் 06154), செங்கல்பட்டு-நெல்லை (வண்டி எண் 06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என 19 ரயில்கள் நாளை (அக்டோபர் 19) இயக்கப்பட உள்ளன.
தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண் 06011), தூத்துக்குடி-எழும்பூர் ( வண்டி எண் 06018), சென்ட்ரல்-கன்னியாகுமரி ( வண்டி எண் 06151), மேட்டுப்பாளையம்-நெல்லை ( வண்டி எண் 06029), செங்கோட்டை-தாம்பரம் (வண்டி எண் 06014), திருச்சி-தாம்பரம் ( வண்டி எண் 06190), தாம்பரம்-திருச்சி ( வண்டி எண் 06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 23 ரயில்கள் அக்டோபர் 20-ம் தேதி இயக்கப்பட உள்ளன.
எழும்பூர்-தூத்துக்குடி (வண்டி எண் 06017), திருச்சி-தாம்பரம் ( வண்டி எண் 06190), தாம்பரம்-திருச்சி ( வண்டி எண் 06191), நாகர்கோவில்-சென்ட்ரல் ( வண்டி எண் 06054), கன்னியாகுமரி- சென்ட்ரல் ( வண்டி எண் 06152), தூத்துக்குடி-எழும்பூர் (வண்டி எண் 06018), நெல்லை-செங்கல்பட்டு ( வண்டி எண் 06156), செங்கல்பட்டு-நெல்லை (வண்டி எண் 06155), போத்தனூர்-சென்ட்ரல் (வண்டி எண் 06100), மதுரை-தாம்பரம் (வண்டி எண் 06046), கோவை-திண்டுக்கல் (வண்டி எண் 06139), திண்டுக்கல்-கோவை (வண்டி எண் 06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 25 ரயில்கள் அக்டோபர் 21-ம் தேதி இயக்கப்பட உள்ளன.
திருச்சி-தாம்பரம் (வண்டி எண் 06190), தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), சென்ட்ரல்-நாகர்கோவில் (வண்டி எண் 06053), கோவை-திண்டுக்கல் (வண்டி எண் 06139), திண்டுக்கல்-கோவை (வண்டி எண் 06140), நெல்லை-செங்கல்பட்டு ( வண்டி எண் 06156), செங்கல்பட்டு-நெல்லை (வண்டி எண் 06155), சென்ட்ரல்-போத்தனூர் (வண்டி எண் 06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 19 ரயில்கள் அக்டோபர் 22-ம் தேதி இயக்கப்பட உள்ளன.
கடந்த வியாழக்கிழமை 13 ரயில்களும், நேற்று 24 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல, இன்று முதல் அக்டோபர் 22-ம் தேதி வரையில் மொத்தம் 110 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி முதல் அக்டோபர் 22-ம் தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


