பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன்
முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வந்தனர். இந்த நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பலியானார்கள்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில், மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஏசிபி, “பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களும் பலியானது பெரும் சோகம். பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது.

இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது. இழந்த விலைமதிப்பற்ற அப்பாவி ஆன்மாக்களின் வெளிச்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஏசிபியின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன், நமது தேசிய கண்ணியம் மற்ற அனைத்தையும் விட முன்னதாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *