தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். எனவே, தங்கள் பிறந்த இடத்தை நோக்கி இந்தியாவின் எந்த முலையில் இருந்தாலும் ரயில், பேருந்து, விமானம் மூலம் பயணம் செய்து சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். இந்த ஆண்டு திங்கள் கிழமை தீபாவளி வருவதால் சனி, ஞாயிறு கிழமைகள் விடுமுறை என்பதால் பல லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விமானம் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.
சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாள் கட்டணம் .3,129 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது 17,683 ரூபாய்க்கு
விமான டிக்கெட் விற்கப்படுகிறது. சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து திருச்சிக்கு 3,608 ரூபாய் விமானத்தில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது அது 15,233 ரூபாயாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 3,608 ரூபாய் உள்ள விமான கட்டணம் தற்போது.17,053 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே போல சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் 4,351 ரூபாய் விமானங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகை எதிரொலியாக அந்த கட்டணம் .17,158 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு சாதாரண நாள் கட்டணம் 5,933 ரூபாயாக இருந்தது. தற்போது அது 30,414 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு சாதாரண நாட்களில் 3,356 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது 21,960 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. அதாவது 6.5 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் 5,293 ரூபாய் கட்டணம் தற்போது .22,169 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சாதாரண நாட்களில் .2,926 ரூபாய் என்ற விமான கட்டணம் தற்போது .15,309 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


