சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் 2,400 ரூபாய் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.300 உயர்ந்து 12,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 2,400 ருபாய் உயர்ந்து 97,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 3 ரூபாய் குறைந்து 203 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 3,000 ஆயிரம் ரூபாய் குறைந்து 2,03,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


