மாஸ்கோவை குறிவைக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்… டிரம்ப் மிரட்டல்!

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், “உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்னையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

டோமாஹாக் ஏவுகணை என்பது 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும். இதன் மூலம் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கோரியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *