ரவி மோகன் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆடிய கவர்ச்சி குத்தாட்டம் சர்ச்சையாகி உள்ளது. அதற்கு கண்டனமும், ஆதரவும் மாறி, மாறி கிடைத்து வருகின்றன.

மெகா ஹிட் கொடுத்த கல்யாணி :-
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மெகா ஹிட்டான “லோகா : சாப்டர் 1” படம் மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
கல்யாணியும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அடுத்தடுத்து நடிகை கல்யாணிக்கு பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

பக்கத்து வீட்டு பெண்ணாக:-
பார்ப்பதற்கு மிகவும் சாதாரண பெண்ணாக, பக்கத்து வீட்டு பெண்ணாக அவரது நடிப்பு இருக்கும் என்று ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். அவ்வளவு யதார்த்தம், முக்கியமாக கல்யாணிக்கு “ஹோம்லி கேள்” லுக் உள்ளது. இதனை உடைத்தெறியும் வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆடிய கவர்ச்சி குத்தாட்டம் தான் தற்போது சர்ச்சையாக பேசப்படுகிறது.

ஆடிய கவர்ச்சி குத்தாட்டம்:-
ரவி மோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வரும் ஜீனி படத்தின் பாடலான “அப்தி அப்தி” பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த பாடலுக்கு ரவி மோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி ஆகியோர் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தனர்.

கல்யாணிக்கு கண்டனம் :-
கல்யாணியின் கவர்ச்சி தோற்றத்திற்கு மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டு பெண் இமேஜுடன் இருந்த கல்யாணி பிரியதர்ஷன் இது போன்ற தோற்றங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், கல்யாணி கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேடிச் செல்வதற்கு பதிலாக சாய்பல்லவி போல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், நடிகை கல்யாணி பணத்திற்காக திறமையை காட்டாமல் கவர்ச்சியை காட்டுவதாக, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எது எப்படியோ..! நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



