தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என கதறியழுத நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9-ம் தேதி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 20 பேர் பங்கேற்றுள்ளனர். தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், யூடியூப் பிரபலங்கள், திருநங்கை, ராப் பாடகர் என கலவையான போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் டார்க்கெட் செய்து விளையாடும் இந்த போட்டியில் இந்த வாரம் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பார்வையாளர்களின் வாக்குகள் கணக்கெடுப்பின்படி போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நந்தினி, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனிப்படை முறையில் தன்னை பாதிக்கிறது என்றும், அதனால் இந்த இடத்தில் இருக்கவிரும்பவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
நேற்றைய நிகழ்ச்சியில், தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என நந்தினி கதறியழுதார். இந்த நிலையில் கன்ஃபசன் அறைக்கு அவரை பிக் பாஸ் அழைத்தார். அங்கிருந்து நேரடியாக நந்தினி வெளியேற அவர் அனுமதித்தார். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனுக்கு முன்பே நந்தினி வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


