இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் பும்ரா ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அவர் படைத்த சாதனையை பார்ப்போம்..!

பும்ரா படைத்த சாதனை :-
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50 போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்திய பேட்ஸ்மேன்களும், சுழற் பந்துவீச்சாளர்களும் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்கள். உதாரணமாக எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட சிலர் இந்த சாதனையை படைத்து இருக்கிறார்கள். தற்போது இந்த பட்டியலில் இணைந்த ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டும் தான்.
தற்போது பும்ரா, ‘இந்தியா Vs வெஸ்ட் இந்தியன்ஸ்’ இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்:
- 50 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, இதுவரை 222 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் (15 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்).
ஒருநாள் கிரிக்கெட்:
- 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.
டி20 கிரிக்கெட்:
- 75 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ள பும்ரா , அதில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.


