பொள்ளாச்சி அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, போலீஸ்-க்காக கத்தியுடன் நடுதெருவில் காத்திருந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாரதி – ஸ்வேதா சண்டை:-
பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 27. பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரின் காதல் மனைவியின் பெயர் ஸ்வேதா (26). இருவரும் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் சரியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த பாரதி, கடந்த சில மாதங்களாக சரியாகப் வேலைக்கு செல்லாமல், மனைவி ஸ்வேதா-வை அடித்து சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
மனைவி நடத்தையில் சந்தேகம்..?
கணவர் பாரதிக்கு காதல் மனைவியான ஸ்வேதாவின் நடந்தையில் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. மனைவி ஸ்வேதாவை கணவர் பாரதியார் அடிக்கடி தாக்கியதாகும் அக்கம்-பக்கத்தினர் சொல்கிறார்கள்.
கொடூரமாக கொலை செய்த பாரதி :
நாளாக, நாளாக சந்தேக புத்தியால் பாரதி காதல் மனைவி சுவேதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடை தெருவில் மளிகைப் பொருட்களை வாங்க சென்றுள்ள ஸ்வேதா அப்போது கணவர் பாரதியை வழிமறித்து சண்டையிட்டு உள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த அந்த கத்தியை எடுத்து காதல் மனைவி ஸ்வேதாவை பலமுறை சரமாரியாக தாக்கி உள்ளார்.
பிறகு ரத்தம் சொட்ட, சொட்ட உள்ள கத்தியை வைத்து நடுத்தெருவில் அப்படியே அமர்ந்துள்ளார் போலீசார் அங்கு வரும் வரை. அருகில் உள்ளவர்கள் கொடுத்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் கத்தியுடன் இருந்த பாரதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


