வெளிநாட்டு செல்ல அனுமதி கோரி பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்த வழக்கை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவருக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

வாங்கிய ரூ.60 கோடி
மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீபக் கோத்தாரி. இவருக்கு வயது 60. இவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் 60 கோடியே 48 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.
வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 3 பேர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்த பலவித விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், நடிகை ஷில்பா ஷெட்டி பணத்தை திருப்பி தருவதாக தெரியவில்லை.

வெளிநாடு செல்ல அனுமதி தாங்க!
இந்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு நடிகையும், அவரது கணவரும் முறையாக ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கையை சேர்ந்த ஒரு யூடிப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

பணத்தை கட்டுங்க; அப்புறோம் நடையை கட்டுங்க!
அதற்கு மும்பை நீதிமன்றம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு காட்டமாக பதில் அளித்துள்ளது. கடனாக வாங்கிய 60 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லுங்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. பணத்தை செலுத்தாமல் இவ்வளவு காலம் இழுத்தடித்ததற்கு கண்டனமும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லுக்-அவுட் நோட்டீஸ் !
மேலும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி உரிமையாளராக இருந்த நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பண மோசடி வழக்கில் சிக்கி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


