வெளிநாட்டு கார்கள் இறக்குமதி மோசடி தொடர்பாக நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் பூடானில் இருந்து இரண்டு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் ஆபரேஷன் நும்கூர் சோதனை என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் சுங்கத்துறை அதிகாரிகள் துல்கரின் கார்களை பறிமுதல் செய்தனர். அந்த கார்களை வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தனர்.
ஆனால், இந்த கார்களை தான் சட்டப்படி வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் என்றும் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் துல்கர் சல்மான் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் மூன்றாவது கார் ஒன்றையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
துல்கரின் சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.


