பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள அகோரி கலையரசன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
யார் இந்த அகோரி கலையரசன்..?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத்தானே அகோரி! என்றும், சாமியார்! என்றும் சொல்லிக் கொண்டவர் தான் இந்த கலையரசன். “நான் மந்திரம் சொல்லி ஒருவர் மீது செய்வினை வைத்தால் அது பலிக்கும்… என்னால் ஒருவரை உயர்த்த முடியும்! அழிக்க முடியும்! என்று வீராப்பாய் பேசியவர் அகோரி கலையரசன். இவரை பல்வேறு யூடிப் சேனல்கள்; செய்தி தொலைக்காட்சிகள் பேட்டிகள் எடுத்துள்ளன.

இவர் “போலி” -ஊர் மக்கள்
இவர் ஊரில் இருக்கும் மக்கள், “இவர் பெரிய சாமியாரெல்லாம் இல்லை.. அகோரியும் இல்லை.. தன்னைத்தானே அப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறார். பெரிய சக்தி எல்லாம் இவருக்கு கிடையாது…” என்று அகோரி கலையரசன் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

பாலியல் புகார்; மனைவிக்கு துரோகம்…!
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவருக்கு ஆதரவாக இருந்து வந்த, இவரின் மனைவியும் “என் கணவர் எனக்கு துரோகம் செய்து விட்டார்; வேறு ஒரு பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருக்கிறார்…” என்று பல்வேளு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன் கணவர் கலையரசன் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார்.
அதற்கு காவல்துறை கலையரசன் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்தச் செய்தி டிவி சேனல்களில் வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலையரசன் எப்படி?
கடந்த ஒரு ஆண்டு காலம் மேலாக ஆள் அடையாளம் தெரியாமல் வாழ்ந்து வந்த கலையசன், திடீரென விஜய் டிவியின் “பிக்பாஸ் சீசன்-9” எப்படி உள்ளே வந்தார்? எப்படி விஜய் டிவி, இந்த நிகழ்ச்சிக்கு இவரை தேர்வு செய்தார்கள்..? என பல்வேறு கேள்விகள் பார்வையாளர்கள் முன் வைக்கிறார்கள்.
நெட்டிசன்களும் சோசியல் மீடியாக்களில் இனி “பிக்பாஸ்” வீட்டில் என்னென்ன நடக்கப் போகிறதோ! என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.



