கணவனை கொலை செய்ய அமேசானில் சுத்தியல் ஆர்டர்- ஓட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி!

ஹரியாணாவில்  காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய அமேசானில் சுத்தியலை மனைவி ஆர்டர் செய்தது அம்பலமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொருள் பொறியாளர்

ஹரியாணா மாநிலம், குருகிராம் செக்டர் 56-ல் வசிப்பவர் சுபம் சவுத்ரி. மென்பொருள் பொறியாளரான இவருக்கும், காஜியாபாத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.  திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே மனைவியின் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதை சுபம் சவுத்ரி கண்டறிந்தார். அவர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்தார். இதனால் மனைவியின் செல்போனை சுபம் சவுத்ரி எடுத்து பார்த்த போது அதிர்ந்து போனார்.

அமேசான் ஆர்டர்

அதில் ஒரு இளைஞருடன், இவரது மனைவி காதல் அரட்டை அடித்த செய்திகளைக் கண்டார். இதனால் தனது மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், மனைவியின் செல்போனில் அமேசான் கணக்கைப் பார்த்த போது திகைத்து போனார். அதில் ஆர்டர் பட்டியலில் ஒரு சுத்தியலும், ஆணுறை பொட்டலமும் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. இது ஒரு ஆபத்தான திட்டமாக இருக்கலாம் என சுபம் சவுத்ரி சந்தேகித்தார். தனது சந்தேகத்தை உறுதிபடுத்த ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினார்.

துப்பறியும் நிறுவனம்

இதற்காக குருகிராமில் உள்ள தனியார் புலனாய்வு நிறுவனமான தியான்ஜு புலனாய்வு சேவையை சுபம் தொடர்பு கொண்டார். அந்த நிறுவனம் சுபம் மனைவியைக் கண்காணிக்கத் தொடங்கியது. சில நாட்களுக்குள், சுபமின் மனைவி தனது காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதையும், அவர்கள் ஒரு ரகசிய சந்திப்பைத் திட்டமிடுவதையும் நிறுவனம் கண்டுபிடித்தது. தனது காதலனுடன் சுபம் மனைவி ரிஷிகேஷ் புறப்பட்டதாக துப்பறியும் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.

ஓட்டலில் சிக்கிய ஜோடி

சுபம் உள்ளூர் போலீஸைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் ரிஷிகேஷுக்குச் சென்றார். ஓட்டலுக்கு வந்ததும், தனது மனைவியும் காதலனும் ஒரு அறையில் ஒன்றாக இருப்பதைக் கண்டு சுபம் அதிர்ச்சியடைந்தார். அப்போது, தான் திருமண வயது கடந்தவள் என்றும், தனது விருப்பத்தின் பேரில் தான், இங்கு வந்தேன் என சுபம் மனைவி போலீஸாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு சுபம் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

உயிர் காத்த செல்போன்

ஓட்டலில் தனது மனைவியின் செயல்கள் அம்பலப்படுத்தப்பட்ட போதிலும், சுபம் அவள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீஸாரிடம் கூறிவிட்டார். தனது மனைவி பல நாட்களாக தன்னை மனரீதியாக சித்ரவதை செய்து வருவதாகவும், தற்போது அவளுடைய நோக்கங்களைப் புரிந்துகொண்டதாகவும் போலீஸாரிடம் கூறினார். இருப்பினும், தனது மனைவியின் ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தையும் வெளிப்படுத்தியதால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதில் சுபம் நிம்மதியடைந்தார்.

ரிஷிகேஷில் நடந்த சம்பவத்தை தனது குடும்பத்திடம் சுபம் கூறினார். அப்போது அவரது மாமியார், திருமணத்திற்கு முன்பே தனது பெண் ஒரு இளைஞனுடன் உறவு கொண்டிருந்ததாகவும், திருமணம் செய்தால், சரியாகி விடும் என்று சுபத்திற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.

துப்பறியும் நிறுவனத்தின் அறிக்கை, சுபத்தின் மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியது. கொலைக்காக சுத்தியலை அவர் பயன்படுத்த முயன்றதும் அம்பலமாகியுள்ளது. ஆணுறையை அவர் காதலனுக்காக வாங்கியதும் தெரிய வந்துள்ளது.  செல்போன் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு கொலை தடுக்கப்பட்டுள்ளது சுபம் சவுத்ரி  விஷயத்தில் உண்மையாகியுள்ளது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *