தற்போது நாட்டில் பல பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம்,காசுக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது அவர்கள் விருப்பத்துடனும், விருப்பம் இல்லாமலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில கல்லூரி மாணவிகளை உறவினர்களே விபச்சாரத்தில் தள்ளி விடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நன்கு பழக்கமான தோழிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை பார்த்தும் சில மாணவிகள் இந்த பாலியல் தொழிலில் ஈடுபவனப்படுவதும் உண்டு.
காவல்துறையினரும் அவ்வபோது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விசாரணை நடத்தி, கைது செய்து வருகிறார்கள்.

விபச்சாரத்தில் கல்லூரி மாணவிகள்:-
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இப்போது 10 கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 10 கல்லூரி மாணவிகள் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்துள்ளனர்.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு:-
போலீசாரின், விசாரணையில் கூடுதல் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், மாணவிகள் ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் வரை சம்பாதித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதுபோன்று பல இடங்களில் கல்லூரி மாணவிகளை வைத்து மிகப்பெரிய அளவில் விபச்சாரம் நடப்பதாகவும்; அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுத்து கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


