பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கிரிவலம் நடைபெறுகிறது.
பவுர்ணமி கிரிவலம்
பவுர்ணமி நாள் என்பது ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இறைவனை வழிபடுவது, தியானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் பவுர்ணமி கிரிவலம் செல்வது பல்வேறு நன்மைகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது. பவுர்ணமி என்பது என்பது சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்நாளில் நிலவு மிகவும் பிரகாசமாக இருப்பதால், இது தெய்வ சக்தியின் வெளிப்பாடு என்று நம்பப்படுகிறது. இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் சென்றதால் தெய்வீக சக்தியை பெற முடியும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
பலன்கள் என்ன?
கிரிவலம் என்பது தியான செயல்பாடு முறையாகும். இது மனதை ஒரு முகப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவும். பவுர்ணமியின் ஒளியில் கிரிவலம் செய்வது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து ஆன்மிக முன்னேற்றத்திற்க உதவுகிறது. பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெரும் என்பது நம்பிக்கை. பவுர்ணமி என்பது புதிய தொடக்கங்களை ஊக்குவிக்கும நேரம் என்பதால், இந்த நாளில் கிரிவலம் செய்வதால் லட்சியங்களை நோக்கி நகர புதிய வழியை திறந்து வைக்கிறது.
மலையை வலம் வருவது ஏன்?
மேலும் பவுர்ணமி கிரிவலத்தின் நோக்கமென்பது சிவபெருமானின் அருளைப் பெறுவதும், மன அமைதியை அடைவதும், எதிர்மறை எண்ணங்களை நீக்குவதுமாகும். கிரி என்றால் மலை, வலம் என்றால் சுற்றுதல் என்பதால், புனித மலைகளை வலம் வருவதே கிரிவலம் ஆகும். பவுர்ணமி நாளில் சந்திரனின் ஒளி மலைகளில் படுவதால், அன்றைய நாளில் கிரிவலம் செல்வதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும்.
உகந்த நேரம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (அக்.6) காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (அக்.7) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


