என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..!
இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்…
- கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸை சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
- கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம், உடலுக்கு மிகவும் நல்லது.
- எலுமிச்சை சாதம் செய்யும் போது, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால், ரொம்ப டேஸ்டா இருக்கும்ங்க…
- ரசம் செய்யும் போது, புளிகரைசலுடன், பழுத்த ஒரு தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து செய்து பாருங்கள் சுவையான ரசம் ரெடியா இருக்கும்ங்க..
“வீட்டு சமையல் குறிப்புகள்…”
- ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
- தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சி கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
- காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
- தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
- தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் மேலே ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.



