விஜய் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடித்ததை போல விஜயையும் முடிக்க பார்க்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கூட தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை கஸ்தூரி சர்ச்சை!
அந்த வகையில், நடிகை கஸ்தூரி தன் கருத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், “நான் எனது இரு குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்கிறேன். கரூர் சம்பவம் கேட்டு ரொம்ப அதிர்ச்சியானேன்!” என்றார்.

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு விஜய் சென்னைக்கு சென்றயிருக்கக் கூடாது, அவர் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். விஜய்யை சென்னையில் இருந்து கரூருக்கு வரவிடாமல் தடுப்பது யார்? அவரை சுற்றி இருக்கும் சிலர், விஜய்யை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டினார்.
விஜய் ஜாக்கிரதை..!
விஜய் கட்சியில் உள்ளவர்களுக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை என்றும், நிர்வாகிகளாக இருப்பவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ள பார்க்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு பேசினார். விஜய் தான் சுதாரித்துக்கொண்டு அரசியலில் செயல்பட வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
மேலும், விஜய் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடித்ததை போல விஜயையும் முடிக்க பார்க்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


