உயிரே! போனாலும், எந்த நோய் வந்தாலும் நான் அசைவத்தை கைவிட மாட்டேன் என அப்பா சரத்குமாரிடம் கண்டிப்புடன் நோ..! சொன்ன நடிகை வரலட்சுமி சரத்குமார்.
சைவமாக மாறிய சரத்குமார்
70 வயதைக் கடந்த நடிகர் சரத்குமார் தற்போது முழு சைவமாக மாறி உள்ளார். அசைவத்தை முழுமையாக தவிர்த்து விட்டாராம். இதனை அவரது மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார். தற்போது சமாச்சாரம் என்னவென்றால் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியை சைவத்திற்கு மாறும்படி வற்புறுத்தி உள்ளாராம். அதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் அப்பாவுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிட்டாராம்.

அது தான் வேணும்..!
“அசைவம் தான், எனக்கு வேணும்.., கிட்னி, லிவர் என எது போனாலும், எந்த நோய் வந்தாலும் அசைவத்தை நிறுத்தமாட்டேன்” என அப்பா சரத்குமாரிடம் அசைவ உணவுகளுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் நோ சொல்லி விட்டாராம்!

எப்போதும் அசைவம் தான்!
இந்த செய்தியை நடிகை ராதிகா சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் 3 வேளையும் அசைவ உணவையே விரும்பிச் சாப்பிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



