சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷாவின் இல்லம் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின் வீடு, திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவர்களது வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதே போல தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


