“ரோஜா… ரோஜா…” பாடல் மூலம் மீண்டும் பிரபலமான பாடகர் சத்யன் மகாலிங்கம் “பைசன்” படத்தில் பாடிய பாடல் வெளியாகி, நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் “மாமன்னன்” படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் “பைசன் காளமாடன்”. இப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் – நடிகை துஷாரா விஜயன், நடிகர் பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

கபடி வீரனாக..
தென் தமிழகத்தை சேர்ந்த கிராமத்து கபடி வீரரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் “தென்னாட்டு” பாடல் வெளியாகி உள்ளது.. “வாடா காள மாடா..” என்னும் இப்பாடலை “ரோஜா… ரோஜா…” பாடல் மூலம் மீண்டும் பிரபலமான பாடகர் சத்யன் பாடியுள்ளார்.
நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் சத்யன் பாடிய பாடலுக்கு மாபெரும் வரவேற்பை அளித்துள்ளது, பல பாடகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


