ஜி.கே.மணியின் மகனுக்கு மீண்டும் ஜாக்பாட்… பாமக இளைஞர் சங்க தலைவராக நியமனம்

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சி இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அன்புமணி தலைமையில் தான் பாமக செயல்படுகிறது என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞருமானகே. பாலு கடிதத்தை காட்டினார் .

இந்த நிலையில், பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மூத்த மகன் தமிழ்க்குமரனை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நியமனம் செய்துள்ளார். இந்த நியமன உத்தரவை தமிழ்க்குமரனிடம் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி வழங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் சூழலை தொடர்ந்து மீண்டும் இந்த நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *