புதிய வரலாறு படைத்தார் எலான் மாஸ்க்… சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்!

உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் உலா வரும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளளார்.

அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலரை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 8.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்களில் 500 பில்லியன் டாலரை நெருங்கிய முதல் நபர் என மஸ்க் அறியப்படுகிறார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 1.25 மணி அளவில் அவரது சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலர்கள். இது போர்ப்ஸ் உலக பணக்காரர்களின் நிகழ்நேர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்வு காரணமாக மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. டெஸ்லா மின்சார கார் தயாரிப்பாளரின் பங்குகள் புதன்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஒரு நாள் ஏற்றம் மஸ்க்கின் தனிப்பட்ட செல்வத்தில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகச் சேர்த்தது. 54 வயதான மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் உள்ளிட்ட நிறுவனங்களை அவர் தன்வசம் கொண்டுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், 351.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் – 245.8 பில்லியன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் – 233.5 பில்லியன், கூகுள் இணை நிறுவனர் லேரி பேஜ் 203.7 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளனர்.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

காலையிலேயே குட்நியூஸ்… கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *