ராஷ்மிகா மந்தனா நடித்த திகல் படமான “திம்மா” படத்தின் பாடல் வெளியானது. இதில் உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா குத்தாட்டம் ஆடி அசத்தியுள்ளார்.

“டியர் ராஷ்மிகா”
தெலுங்குவில் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தெலுங்கு இளைஞர்களும் மட்டும் இல்லாமல் தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. ‘பான் இந்திய’ படமாக வெளியான “புஷ்பா” படத்தின் மூலம் இந்தியில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என படுபிசியான நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வந்தார். ஆனால் தெலுங்கு படங்களை காட்டிலும் இந்தி திரையுலகில் அதிக கவர்ச்சிகளை அள்ளி வீசினார். இதனால் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்கிக் கொண்டார்.

இந்தியில் ராஷ்மிகா:–
இந்நிலையில், இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கும் திகில் படமான “தம்மா” படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ள ராஷ்மிகாவை ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் கொண்டாடி வருகிறார்கள். இப்படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் 21ம் தேதி வெளியாகிறது.

கவர்ச்சி ஆட்டத்தில் அம்மணி:-
தற்போது “தம்மா” படத்தில் ஒரு பாடல் வெளியாகி சோசியல் மீடியாக்களில் ராஷ்மிகாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் நடிகை தமன்னா ஸ்டைலில் தொடையை காட்டி கவர்ச்சியாக நடனம் ஆடியது தான் அதற்கு காரணம். இதற்கு அம்மணி கணிசமான தொகையை பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா என்றால் நடிகைகள் ஒருவிதம்; தெலுங்கு, கன்னடம் சினிமா என்றால் நடிகைகள் வேறுவிதம்; அதுவே பாலிவுட் என்றால் நிச்சயம் கவர்ச்சி காட்டித்தான் ஆக வேண்டும் என்று மூத்த நடிகைகள் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


