தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை கடந்த செப்டம்பர் .6-ம் தேதி 80,000 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 27-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 750 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 85 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


