தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

எப்போதும் நயன்தாரா தான்:
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நாம் எதிர்பார்த்ததை போல “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா தான் உள்ளார். தனது கல்யாண வீடியோவை ‘நெட்ப்ளிக்ஸ்’ ஓடிடிக்கு விற்று, பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடியை தாண்டி உள்ளது. இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரியல் ஸ்டேட், ஹோட்டல், பெரும் நிறுவனங்களில் முதலீடு என பல்வேறு பிசினஸ் செய்து வருகிறார் நடிகை நயன்தாரா. இதன் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து உள்ளார்.
2ஆம் இடத்தில் உள்ள நடிகை “பால்கோவா” மேனிக்கு சொந்தக்காரியும், இந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வரும் நடிகை தமன்னா தான். தமன்னா ஒரு நடன நிகழ்ச்சி என்றாலும், பாலிவுட் சினிமாவில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட வேண்டும் என்றாலும் கோடிக்கணக்கில் பணம் வாங்கி கொள்கிறாராம்.

தமிழில் ‘கல்லூரி’ என்னும் படத்தில் சாதுவான பெண்ணாக நடித்து, பிறகு தனுஷின் ‘படிக்காதவன்’ படம் மூலம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி, தெலுங்கு சினிமாக்கு சென்று அங்கு முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறி தற்போது பாலிவுட் வரை தனது கவர்ச்சியால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் நடிகை தமன்னா. இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

3ஆம் இடத்தில் இருக்கும் நடிகை சமந்தா. நாக சைதன்யா-வின் முன்னாள் மனைவியான நடிகை சமந்தா, சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூனாவின் “புஷ்பா” படத்தில் “ஓ.. சொல்றீயா மாமா..! ஓ.. சொல்றீயா மாமா..!” என்ற ஐட்டம் பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனம் ஆடி ‘பான் இந்திய’ நடிகையாக உச்சம் பெற்றார். சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

4வது இடத்தில் கொஞ்சம் பழைய நடிகையான த்ரிஷா தான். “ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் முதலீடுகள்” என இந்த அம்மாவுக்கு பல பிசினஸ். முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார்.
5-ஆம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். கவர்ச்சி, துள்ளல் என இளைஞர்களுக்கு மிகப்பிடித்தமான நடிகையான ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் நடிகை அனுஷ்கா, நடிகை காஜல் அகர்வால், நடிகை குஷ்பு, நடிகை ராதிகா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.


