கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( செப்டம்பர் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.


