ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

ஜெயிலர் 2 திரைப்படம் 2026 ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு என பெரும் நடிகர் பட்டாளத்துடன் உருவான படம் ஜெயிலர். கடந்த 2023 ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான இப்படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்தன.

டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் அடங்கிய படக்குழு விமானம் மூலம் பாலக்காடு சென்றனர். அங்கு சூட்டிங் முடித்து இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் இன்று திரும்பினர்.

கோவை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் ஜெயிலர் 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அடுத்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

Related Posts

நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிப்பு- எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் தேர்வு

தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *