தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிப்பு- எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் தேர்வு

தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிப்பார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

இதன்படி 2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, திரைப்பட அரங்க அமைப்பாளர் ஜெயகுமார், திரைப்பட சண்டை ப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் , சின்னத்திரையில் நடிகர் கமலேஷ், இயல் வகயில், எழுத்தாளர் திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமய சொற்பொழிவாளர் சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர், இசை வகையில் குரலிசை கலைஞர் அசோக் ரமணி, திருமுறை தேவார இசையில் சற்குருநாதன் ஓதுவார், தமிழிசை பாடகர் தக்கேசி, மிருகதங்கம் நரேந்திரன், கோட்டு வாத்தியம்  நரசிம்மன், நாதசுர ஆசிரியர் பில்லப்பன், நாதசுரம் டி.ஜே.சுப்பிரமணியன், சீனிவாசன், தவில் சேகர், பரத நாட்டிய ஆசிரியர் பழனியப்பன், பரதநாட்டியம் பிரியா கார்த்திகேயன், நாடகத்துறையில் நடிகர் முருகன், நாடக இயக்குநர் நாராயணன், ஆர்மோனியம் அலெக்ஸ், இசை நாடக நடிகர் விசுவநாதன், கிராமிய பாடகர் வீர சங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டம் காமாட்சி, பெரியமேளம் முனுசாமி, நையாண்டி மேள நாதஸ்வரம் மருங்கன், வள்ளி ஒயில் கும்மி கே.கே.சி.பாலு, இதர கலைப்பிரிவுகள் வழியே ஓவியர் ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா.வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, திரைப்பட செய்தி தொடர்பாளர் டைமண்ட் பாபு, திரைப்பட புகைப்பட கலைஞர் லட்சுமி காந்தன், சின்னத்திரை நடிகை மெட்டி ஒலி காயத்ரி,எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம், இலக்கிய பேச்சாளர் அப்துல்காதர், சமய சொற்பொழிவாளர் முத்துகணேசன், குரலிசை ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ், வயலின் பகலா ராமதாஸ், மிருதங்கம் நாராயணன், நாதசுரம் எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ், முருகவேல், தவில் பாபு, கதா கலாட்சேபம் சுசித்ரா பாலசுப்பிரமணியன்,பரதநாட்டிய ஆசிரியர் அமுதா தண்டபாணி, பாகவத மேளா சுப்பிரமணிய பாகவதர், பரதநாட்டிய குரலிசை சுரேஷ், நாடக நடிகர் பொன் சுந்தரேசன், நாடக இயக்குநர் நன்மாறன்,நாடகத் தயாரிப்பாளர் சோலை ராஜேந்திரன், இசை நாடக நடிகர் சத்தியராஜ், தேவராட்டம் ரஞ்சிதவேல் பொம்மு, பொம்மலாட்டம் கலைவாணன், தப்பாட்டம் எம்.எஸ்.சி.ராதாரவி, மேள நாதஸ்வரம் கே.பாலு, பண்பாட்டு கலை பரப்புனர் சாமிநாதன், ஓவியர் லோகநாதன்-ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு திரைப்பட நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன்,திரைப்பட நட இயக்குநர் சாண்டி (எ) சந்தோஷ்குமார், திரைப்பட செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உமா சங்கர் பாபு, அழகன் தமிழ்மணி, கவிஞர் ஜீவபாரதி, குரலிசை காசியப் மகேஷ், வீணை ஹேமலதாமணி, கிளாரினெட் வே.பிரபு, நாதசுரம் பி.பி.ரவிச்சந்திரன், ஞானநடராஜன், பரமேஸ்வரன், தவில் ராமஜெயம் பாரதி, ராதாகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியர் தனசுந்தரி, குச்சிப்பிடி நாட்டியம் ஜெயப்பிரியா, பரதநாட்டிய குரலிசை ஹரி பிரசாத், பழம் பெரும் நாடக நடிகர் ஜோதிகண்ணன், நாடக நடிகர் வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல், விழிப்புணர்வு நாடக நடிகர் தேவநாதன், இசை நாடக நடிகர் ஏ.ஆர்.ஏ.கண்ணன், இசை நாடக நடிகை தமிழ்ச்செல்வி, தெருக்கூத்து ராமநாதன், வில்லுப்பாட்டு ஜெகநாதன், நையாண்டி மேள தவில் மகாமணி, கிராமிய பாடல் ஆய்வாளர் சந்திரபுஷ்பம், சிற்பி தீனதயாளன் ஆகியோர் கலைமாமணி விருது பெறுகின்றனர்.

சிறப்பு விருதுகளாக பாரதியார் விருது (இயல்) முருகேச பாண்டியன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) கே.ஜே. யேசுதாஸ், பாலசரசுவதி விருது (நாட்டியம்)- பதஸ்ரீ முத்துகண்ணம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

ஜெயிலர் 2 திரைப்படம் 2026 ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு என…

நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *