பரபரப்பு… அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக. தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

தவெக தலைவர் விஜய் பாஜகவின் பி டீமா? – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை,. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ரகசியமாக சந்தித்து பேசினார். சென்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *