
அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள், ஏசி, டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவராத்திரி பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, நம்பிக்கையைக் கொண்டு வரட்டும். நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும். மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய உறுதியை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.