
ஆப்கானிஸ்தான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
சீனாவின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படைத் தளம் உள்ளது. இதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி வருகிறார். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள பஹ்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தாலிபான்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் பேசுகையில்,, “பஹ்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் விரைவில் திருப்பித் தர வேண்டும். அப்படி தராவிட்டால் மோசமான விஷயங்கள் நடக்கும்” என்று தெரிவித்தார். ஆனால், அவரின் இந்த மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி கூறுகையில் சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர். ஆனால், எந்த ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது. என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை என்று தெரிவித்துள்ளது.