
ஓசூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது வடமாநில சிறுவனை தெருநாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள பசுமைகுடில் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சத்யா(3) என்ற சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தெருநாய் சிறுவன் சத்யாவை கடித்து குதறியது. இதில் சத்யாவின் முகம், கை, கால் பகுதிகளில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சத்யாவை நாயிடமிருந்து மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சத்யா சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சத்யாவை அவனது பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அங்கு சத்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரேபிஸ் நோய் தாக்குதலால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம், வடமாநிலத் தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.