
கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது. 30 வயது தக்க இளம்பெண் ஒரு பேப்பரை உடலில் சுற்றிக் கொண்டு காவல் நிலையம் வந்தவர், சட்டென அந்த பேப்பரை வீசியெறிந்து விட்டு நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து அந்த பெண்ணின் உடலில் சுற்றியுள்ளனர். ஆனால், அந்த பேப்பரையும் பிடுங்கி எறிந்து விட்டு, என் புகாரை பதிவு செய் என வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.
அந்த இளம்பெண், நிற்க முடியாத அளவுக்கு மது போதையில் இருந்துள்ளார். தனது கணவர் தாக்கி விட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சண்டை போட ஆரம்பித்தார். அப்போது காவல் நிலையத்திற்கு அவர் கணவர் வந்தார். அவரிடம் விசாரித்த போது தான் ஒரு கூலித்தொழிலாளி என்றும், தங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். தனது மனைவி குடித்து விட்டு போதையில் அடிக்கடி தகராறு செய்வதாக கூறினார். வீட்டில் மது குடிக்க முயன்ற போது அதை தான் தடுத்ததாகவும், அதனால் துணிகளை கழட்டி போட்டு நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு தனது மனைவி வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண் போலீஸார் இளம்பெண் உடலில் துணியை சுற்றினர். அரைமணி நேரமாக காவல் நிலையத்தில் அமர்ந்து இளம்பெண் பிரச்னை செய்தார்.இந்த விஷயத்தில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாகவும், குடும்ப தகராறு காரணமாக அவர் இப்படி நடந்ததாகவும் போலீஸார் கூறினர். நிலைமை மோசமடைந்தால், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறினர். இதன்பின் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அவரது கணவருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர். தாஜ் கஞ்ச் காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.