பத்திரிகை சுதந்திரத்திற்காக பாஜக வீதியில் இறங்கும்- நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

வடகிழக்குப் பருவமழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்தும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது. திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக நமது பாஜக வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *