அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை- உடலை மீட்டுத்தர தந்தை வேண்டுகோள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி உதவிடுமாறு அவரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன்(30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். தனது முதுகலை பட்டப்படிப்பை முடிந்த பிறகு ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வுக்குப் பிறகு கலிபோர்னியாவுக்குச் சென்றார்.

கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தனது அறைத் தோழருடன் ஏற்பட்டதகராறில் முகமது நிஜாமுதீன் செப்டம்பர் 3-ம் தேதி அமெரிக்கா காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஏ.சி பிரச்னையில் அவருக்கும், அறையில் தங்கியிருந்த நண்பருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முகமது நிஜாமுதீன், தனது நண்பரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகராறை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின்  அவசர எண் 911-க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார், முகமது நிஜாமுதீனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்கா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்.3-ம் தேதி சாண்டா கிளாராவில் உள்ள விடுதியில் தன்னுடன் இருந்த நண்பரை முகமது நிஜாமுதீன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை பலமுறை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையின் அவசர எண் 911-க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்ததில், அறையில் ஒருவர் கத்தியுடன் மற்றொருவரை பிடித்து வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொருவர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாண்டா கிளாரா மாவட்ட நீதிமன்றமும், சாண்டா கிளாரா காவல்துறையும் கூட்டு விசாரணை நடத்தி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமது நிஜாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அவரது பெற்றோருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகனின் உடலை திருப்பி அனுப்ப அவசர உதவி கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு முகமது நிஜாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் கடிதம் எழுதியுள்ளார். வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தலையிட்டு தனது மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப உதவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் செய்தி தொடர்பாள அம்ஜத் உல்லா கான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மத்திய அரசு மட்டுமின்றி தெலங்கானா மாநில அரசுகள் இவ்விஷயத்தில் உதவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *