மூச்சுத்திணறும் காஸா விவகாரத்தில் மவுனமாக இருப்பது சரியல்ல- மு.க.ஸ்டாலின் வேதனை!

காஸாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதி, “காஸா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது. காஸாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் காட்சி, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐ.நா.விசாரணை ஆணையத்தின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன.

அப்பாவி உயிர்கள் இப்படி நசுக்கப்படும்போது, ​​மவுனமாக இருப்பது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியும் எழ வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றுபட வேண்டும். இந்த பயங்கரத்தை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *