அன்புமணி தான் பாமக தலைவர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அன்புமணி தான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என வழக்கறிஞர் கே.பாலு கூறினார்.

இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், * பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின்படி,  ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அத்துடன் 2026 வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் பாமக நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இதன் மூலம் அன்புமணிதான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நோக்கி தான் நாங்களும் பயணிக்கிறோம். எனவே, அனைவரும் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு வாருங்கள் என்றார். இதையடுத்து பாமக அலுவலகம் முன்பு கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுககு இனிப்பு வழங்கினார்.

Related Posts

விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *