
ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார்.
இது தொடர்பான வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 13 நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் அவர்கள் ரூ. 40 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். எஸ். ரமேஷ், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.