நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்

நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார்.

நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அந்நாட்டு இளைஞரகள் பலர் தொடர்ந்து எழுதி வந்தனர். இதனால் சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து வீதிக்கு வந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. காட்மாண்டுவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அத்துடன் பிரதமராக இருந்த சர்மா ஒலி இல்லத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரம் மற்றும் காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி செப்டம்பர் 9-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து நாட்டின் சட்டம் ஒழுங்கை ராணுவம் கைக்கு போனது. இதனால் நேபாளத்தில் படிப்படியாக வன்முறை குறைந்து அமைதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

பிரதமர் பதவி விலகியதை அடுத்து இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உச்ச நீதின்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி (73), காட்மாண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர். இதில் சுசீலா கார்கிக்கு ஆதரவு பெருகியதால் அவர் நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுசீல கார்கி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதன் மூலம் நேபாள நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை சுசீலா பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக நேபாள நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குலம் கூட தர முடியாது- டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி!

ஆப்கானிஸ்தான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சீனாவின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படைத் தளம் உள்ளது. இதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்…

செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *